Search
Search

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?

iranthavargal kanavil vanthal

ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. கனவுகள் பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதுதான் வருகின்றன. இந்த பதிவில் இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும்? அதன் பலன்கள் என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும். இறந்தவர்கள் கனவில் வந்து உங்களை ஆசிர்வாதம் செய்தால் எல்லா நன்மையும் ஏற்படும்.

இறந்து போனவர்கள் கனவில் வந்து அழுவது போல கனவு வந்தால் அது நல்லதல்ல. உடனே கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வது நல்லது.

இறந்தவர்களுடன் நீங்கள் பேசுவது போல கனவு கண்டால் உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும் என அர்த்தம்.

இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவது போல கனவு கண்டால் பெரிய பிரச்சனையில் இருந்து தப்பிப்பீர்கள்.

சவப்பெட்டி கனவில் வந்தால் உங்களுக்கு நெருங்கியவர்கள் இறக்கப் போகிறார்கள் என்று அர்த்தம்.

இறந்தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும்.

இறந்து போன உங்கள் தாய் கனவில் வந்தால் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கப்போகிறது என அர்த்தம்.

இறந்துபோன உங்கள் தந்தை கனவில் வந்தால் உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சினை விரைவில் தீரும் என அர்த்தம்.

உங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவர் இறந்து போனது போல கனவு வந்தால் துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம்.

நீங்களே இறந்து போனது போல கனவு வந்தால் பயப்பட தேவையில்லை. வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட்டு நன்மைகளே நடக்கும்.


Leave a Reply

You May Also Like