Search
Search

சிறையில் உள்ள மந்திரிக்கு மசாஜ் : வீடியோ வெளியீடு

டெல்லியில் ஆம் ஆத்மி அரசில் மந்திரியாக இருந்த சத்யேந்தர் ஜெயின் மீது பணமோசடி வழக்கு பதிவானது. இதனால், கடந்த மே மாதம் 30-ந்தேதி அமலாக்க இயக்குநரகம் அவரை கைது செய்தது.

இந்த நிலையில், சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது என அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் புகார் அளித்தது.

சிறையில் தலை மசாஜ், கால் மசாஜ், முதுகு மசாஜ் என அனைத்து வசதிகளும் ஜெயினுக்கு அளிக்கப்படுகிறது. டெல்லி மந்திரி சிறை அறையின் அனைத்து சி.சி.டி.வி. காட்சிகளையும் அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது.

தற்போது சிறையில் ஜெயின் மசாஜ் செய்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

You May Also Like