தேசிங்கு இயக்கத்தில் STR 48.. ஷூட்டிங் விரைவில் துவக்கம் – வெளியான சில ருசிகர அப்டேட்!

கடந்த 2020ம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாள். துல்கர் சல்மானுக்கு ஏற்கனவே தமிழில் இருந்த ரசிகர் கூட்டத்தை இன்னும் அதிகப்படுத்திய ஒரு திரைப்படம் என்றால் அது மிகையல்ல.
அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் மாபெரும் வெற்றி கண்ட இந்த திரைப்படம் வசூல் சாதனையையும் புரிந்தது. இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தனிப்பட்ட முறையில் தேசிங்கு பெரியசாமி அழைத்து, குறிப்பாக இன்டர்வல் பிளாக் பற்றி வியந்து பேசி தனக்கும் ஒரு கதை எழுதுமாறு அவரிடம் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுது சிலம்பரசனின் 48வது திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கவிருக்கிறார் தேசிங்கு பெரியசாமி. சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்திற்கான பணிகள் துவங்கியது.
இந்நிலையில் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரத்திற்குள் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது இந்த படத்திற்கான pre production பணிகள் மற்றும் லோகேஷன் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மாபெரும் பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் அடங்கி இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் முணுமுணுக்கிறது.