Search
Search

முதல் முறையாக இணையும் தனுஷ் – வடிவேலு…எந்த படத்தில் தெரியுமா??

Dhanush-Vadivelu

ரஜினி, விஜய், அஜித் விக்ரம் என பல முன்னணி ஹீரோவிடம் நடித்த வடிவேலு முதல் முறையாக தனுஷிடம் இணைந்து நடிக்க உள்ளதக தகவல் பரவி வருகிறது.

தனுஷ் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு நடிப்பதாக ஒப்பந்தம் ஆனார். ஆனால் படக்குழுவினருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார். பிறகு வடிவேலுக்கு பதிலாக விவேக் நடித்தார்.

தற்போது தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து வடிவேலு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

You May Also Like