“அடுத்த கட்டத்திற்கான பயணம்”.. தனுஷ், மாறி செல்வராஜ் கூட்டணியில் ஒரு சரித்திர படம்!

பிரபல இயக்குநர் மாறி செல்வராஜ் இயக்கத்தில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், பாஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
மேலும் மிகவும் கனமான பாத்திரம் ஒன்றை ஏற்று நடித்து வருகிறார் வைகைப்புயல் வடிவேலு, தற்கால அரசியலை பேசும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் மாறி செல்வராஜ் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மாமன்னன் படத்திற்கு பிறகு தனுஷ் அவர்களுடைய Wunder Bar நிறுவன தயாரிப்பில் உருவாக உள்ள அடுத்த திரைப்படத்தை செல்வராஜ் இயக்கவிருக்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த படம் ஒரு வரலாற்று திரைப்படமாக அமையும் என்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த திரைப்படத்திற்கான கதையை மாறி செல்வராஜ் உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் இதுவரை தயாரித்து வெளியிட்ட படங்களை காட்டிலும் மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் தானே முன்வந்து இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்ததுதான் தன்னால் மறக்க முடியாத நினைவு என்றும், துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு இந்த படத்திற்கு நகர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனுஷ் மற்றும் மாறி செல்வராஜ் ஆகியோர் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல இந்த படம் வழி வகுக்கும் என்றும் கூறப்படுகிறது.