லியோ படத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்பு? – சஸ்பென்ஸ் மன்னனாக மாறிய “லோக்கி”

தற்பொழுது தமிழ் சினிமாவின் Most Wanted இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார்.
அதன் பிறகு தனது கனவு நாயகனான கமல்ஹாசனை வைத்து அவர் இயக்கி வெளியிட்ட திரைப்படம் தான் விக்ரம். அந்த திரைப்படம் லோகேஷின் புகழை இன்னொரு பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றது என்றால் அது சற்றும் மிகையல்ல.
விக்ரம் 2 படத்திற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது லோகேஷ் மீண்டும் தளபதி விஜய் அவர்களை வைத்து LEO என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காஷ்மீரில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் தான் இணைவதாக விஜய் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லியோ திரைப்படத்தில் பிரபல நடிகர் தனுஷ் Cameo செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
இது எந்த அளவிற்கு உறுதியான செய்தி என்பது தெரியவில்லை என்றபொழுதும், விஜய் அவர்களுடைய திரைப்படத்தில் தனுஷ் ஒரு கேமியோ செய்வது என்பது உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். காரணம் தனுஷ் அவர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் விஜய் அவர்களும் ஒருவர். அதேபோல தளபதி விஜயும் தனுஷ் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர்.
எது எப்படியோ எல்லாமே அந்த மனுஷன் லோகேஷ் கனகராஜுக்கு தான் வெளிச்சம்.