Search
Search

தியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்

dhyana mudra benefits in tamil

மன அழுத்தம், மனக்கவலை போன்றவைதான் பல நோய்கள் வருவதற்கு காரணமாக இருக்கிறது. மன அழுத்தத்தால் பிட்யூட்டரி சுரப்பி, பீனியல் சுரப்பி, தைமஸ் சுரப்பி சரியாக சுரக்காமல் பலவித நோய்கள் ஏற்படுகிறது.

மன அழுத்தத்தை நீக்கி மன அமைதி தருவதுதான் தியான முத்திரை. இந்த முத்திரை செய்வதால் டென்ஷன், பதட்டம், கவலையினால் ஏற்பட்ட உடல் பாதிப்பு ஆகியவை நீங்குகிறது.

செய்முறை

விரிப்பில் நேராக அமரவும். கண்களை மூடி மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக விட வேண்டும். இதனை பத்து முறை செய்ய வேண்டும். பிறகு படத்தில் காட்டியது போல் இடது கையை கீழே வைத்து அதன் மேல் வலது கையை வைக்கவேண்டும். பிறகு இரண்டு கைகளின் கட்டை விரலின் நுனி பகுதி தொடுமாறு வேண்டும். பிறகு கண்களை மெதுவாக திறக்கவும்.

நம் இரண்டு கைகளில் உள்ள கட்டைவிரல் நமது உடலில் உள்ள நெருப்பை கட்டுப்படுத்துகின்றது. டென்ஷனால் ஏற்படும் மனக்கவலை, பதட்டம், உடல் உஷ்ணம் ஆகியவற்றை இந்த முத்திரை சமப்படுத்துகின்றது.

இந்த முத்திரை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

மன அழுத்தம், மனக் கவலை நீங்கும்.

ரத்த அழுத்தம் சரியாகும்.

இதய நோய்கள் வராமல் இதயம் பாதுகாப்பாக இருக்கும்.

பய உணர்வு நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும்.

Leave a Reply

You May Also Like