Search
Search

176 பேரை வெளியேற்றும் விகடன் : கண்டனம் தெரிவித்த இயக்குனர்

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் சம்பளத்தையும் சில நிறுவனங்கள் ஊழியர்களை பணி நிறுத்தம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான விகடன் பத்திரிக்கை தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் 176 பணியாளர்களை நீக்கம் செய்வதாக வந்த செய்தியை அடுத்து ஊடகத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் விகடன் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பணி நீக்கம் செய்தியை கேள்விப்பட்ட குறும்பட இயக்குனர் திவ்யபாரதி இதனை கண்டிக்கும் வகையில் அவருக்கு விகடன் அளித்த விருதினை திருப்பி அனுப்புவதாக கூறி உள்ளார்.

இந்த விருது கடந்த 2013ஆம் ஆண்டு ஆனந்தவிகடனில் டாப் 10 நம்பிக்கை நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த குறும்பட இயக்குனர் திவ்யபாரதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You May Also Like