சூட்டிங் ஸ்பாட்டா..? இல்ல பிறந்த நாள் நிகழ்ச்சியா..? மகிழ்ச்சியில் பொங்கிய இயங்குனர் கார்த்திக் சுப்புராஜ்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் தற்போது விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிக்கும் சியான் 60 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை 7ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார், மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வாணி போஜன், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தனது படக்குழுவினரோடு தனது பிறந்த நாளை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கேக் வெட்டி சந்தோஷமாக கொண்டாடியுள்ளார்.. அது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.