Search
Search

மூன்று பேரும் கலக்கிட்டீங்க.. வெளியான ஏழு கடல் ஏழு மலை பட சிறப்பு தகவல்!

பிரபல இயக்குநர் ராம் இயக்கத்தில் வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வெளியாகவுள்ள திரைப்படம் தான் “ஏழு கடல் ஏழு மலை”. பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் ஆக்சன் ஹீரோ சூரி இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளனர்.

ராம் அவர்களின் “கற்றது தமிழ்” திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற நடிகை அஞ்சலியும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மதன் கார்த்தி அவர்களுடைய வரிகளில் பாடல்கள் உருவாகியுள்ள நிலையில் தற்பொழுது இந்த படக்குழு தங்களுக்கான டப்பிங் பணிகளை பேசி முடித்துள்ளனர்.

நடிகர் சூரி வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில், நடிகை அஞ்சலி மற்றும் நிவின் பாலி ஆகியோருடன் இணைந்து டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ள காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 5 திரைப்படங்கள் மட்டுமே இயக்கி வெளியிட்டுள்ளார் என்றபோது, ராம் அவர்களின் இயக்கம் ஒவ்வொரு முறையும், ஒரு தனிக்கதை பேசும் வல்லமை கொண்டது. அவர் இயக்கி வெளியிட்ட தங்க மீன்கள் படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் மற்றும் தமிழக அரசின் இரண்டு விருதுகள் கிடைத்ததே அதற்கு சாட்சி.

You May Also Like