Search
Search

187 நாணயங்களை விழுங்கிய 60 வயது முதியவர் : வயிற்றில் இருந்து அகற்றிய மருத்துவர்கள்!

trending news in tamil

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சந்தே கெல்லூரு கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மப்பா ஹரிஜன். கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் நாணயங்களை விழுங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

trending news in tamil

இந்நிலையில், திம்மப்பாவுக்கு கடந்த வாரம் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடுமையான வயிற்று வலியில் அவர் துடித்த அவரை ராய்ச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு எக்ஸ்-ரே எடுத்த பார்த்தபோது வயிற்றில் நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சைக்காக பாகல்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திம்மப்பா அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்து 56 ஐந்து ரூபாய் நாணயங்களும், 51 இரண்டு ரூபாய் நாணயங்களும், 80 ஒரு ரூபாய் நாணயங்களையும் வெளியேற்றினர். உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து அகற்றியதால் திம்மப்பா உயிர் பிழைத்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like