ஆசிரியர் டூ ஜனாதிபதி : திரௌபதி முர்மு கடந்து வந்த பாதை

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடியின் பெண் முதல்வர் என்ற பெருமையை பெறுகிறார்.
திரெளபதி முர்மு ஒடிசாவின் மிகப்பெரிய மாவட்டமான மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் 1958-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி பிறந்தார்.
அவரது தந்தை பிரஞ்சி நாராயண் டூடு அடிப்படை வசதிகளே கிடைக்காத கிராமத்தில் மகளுக்குக் கல்வி கிடைக்கவேண்டும் என்று முர்முவை பள்ளிக் கல்விக்குப்பிறகு, ராய்ரங்பூரில் கல்லூரிப் படிப்பையும் முடிக்கவைத்தார்.
திரௌபதி முர்மு திருமணமான சில ஆண்டுகளிலேயே விபத்து ஒன்றில் தன்னுடைய கணவரை இழந்தார். அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் தன்னுடைய இரண்டு மகன்களையும் பறிகொடுத்தார்.

1979 முதல் 1983 வரை ஒடிசா மாநில அரசில் நீர்ப்பாசனம் மற்றும் மின்துறையில் இளநிலை உதவியாளராக பணியைத் துவங்கினார் முர்மு.
1994-ம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். 1997-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்ததோடு ராய்ரங்பூர் கவுன்சிலராகவும் அரசியலில் தனது என்ட்ரியை பதிவு செய்தார்.
அதே ஆண்டு பா.ஜ.கவின் பழங்குடியினர் மோர்ச்சாவின் துணைத் தலைவராகவும் அரசியலில் அடுத்த அடியை எடுத்து வைத்தார்.
2000 – 2009 என இண்டு முறை ராய்ரங்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். போக்குவரத்து மற்றும் வணிகம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றினார்.
இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும்போது தனது பிரமாணப் பத்திரத்தில், “தனக்கு வீடுகூட இல்லை. சிறிய வங்கி இருப்பு, கொஞ்சம் நிலம் மட்டுமே உள்ளது” என்று தெரிவித்து ஆச்சர்யப்படுத்தினார்.
2015-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றார். பதவிக்காலம் முடிந்தும் கொரோனாவால் பதவியை நீட்டித்தது மத்திய அரசு.
இந்த நிலையில், தற்போது நடைபெற்ற 15-வது குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட திரௌபதி முர்மு, எதிர்பார்த்தபடியே அமோக வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர்’ என்ற புகழையும்,
இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர்’ என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.