கர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

கருவுற்று இருக்கும் தாயார் மாதுளைப் பழம் சாப்பிட்டால் வளரும் குழந்தைக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கருவில் வளரும் குழந்தைகளுக்கு போலிக் சத்து மிக முக்கியம். இது குழந்தையில் மூளை வளர்ச்சிக்கும், நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.

Advertisement

மாதுளம் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள ப்ரீ ராடிக்கல்ஸை அகற்றப் பெரிதும் துணை புரிகின்றன.

மாதுளம் பழங்களில் விட்டமின் சி, ஈ மற்றும் ஃபோலேட் ஆகியவை உள்ளன. இதில் உள்ள விட்டமின் சி கர்ப்பிணிகளுக்கு உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவுகிறது.

மாதுளம் பழத்தில் உள்ள சத்துக்கள் உடலின் இரத்த உற்பத்திக்கு உதவுகிறது. இதனால் இரத்த சோகை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

மாதுளம் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் நன்கு செரிமானம் ஆகும். எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் தசைப் பிடிப்புகள் ஏற்படும். இதனை சரிசெய்ய மாதுளம் பழம் சிறந்த தீர்வாக அமைகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் மாதுளம் பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.

மேலும் அனைத்து பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காணலாம்.