Search
Search

தொடர்ந்து உயரும் முட்டை விலை : இல்லத்தரசிகள் வேதனை

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாய் 75 காசுகளிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் தேதி முட்டை ஒன்றின் விலை 4 ரூபாய் 45 காசுகளில் இருந்து 15 காசுகள் உயர்த்தப்பட்டு, 4 ரூபாய் 60 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. 24ஆம் தேதி 15 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 75 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் மீண்டும் 25 காசுகள் விலை உயர்த்தி 5 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பண்ணையாளர்கள் கூறுகையில் ”வட மாநிலங்களில் குளிர்காலம் தொடங்கி உள்ளதால் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகம், கேரளாவில் முட்டை விற்பனையும் அதிகரித்து வருவதால் விலை உயர்த்தப்படுகிறது. முட்டையின் விலை மேலும் உயரும்” என்று தெரிவித்தனர்.

You May Also Like