ரஜினியின் 169 வது படத்திற்கு திரைக்கதை எழுதும் பிரபல இயக்குனர்

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் டாக்டர், பீஸ்ட் படத்தை இயக்கினார். பீஸ்ட் படத்திற்கு பிறகு ரஜினியின் 169 வது படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்துள்ளது.

இந்த படத்தின் கதையை ரஜினிகாந்தே எழுதியுள்ளார். இந்த படத்திற்கு முதலில் நெல்சன் திரைக்கதை எழுத போவதாக கூறப்பட்டது. ஆனால் ‘பீஸ்ட்’ படம் விமர்சனம் காரணமாக நெல்சன் சொன்ன திரைக்கதை ரஜினிக்கு பிடிக்கவில்லையாம். இதனால் இந்த படத்திற்கு கே எஸ் ரவிக்குமார் திரைக்கதை எழுத உள்ளாராம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என தகவல்கள் வெளிவரவில்லை. திரைக்கதை எழுதி முடித்த பிறகு மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement