இளையராஜா ஒரு மட்டமான மனிதர்.. கொதித்து பேசி பிரபல இசையமைப்பாளர்

இளையராஜா, 1970கள் துவங்கி இன்று வரை பல கோடி இசைப்பிரியர்களுக்கு விருந்து வைத்து வரும் ஒரு மாபெரும் கலைஞன். உலக அளவில் இவருடைய இசை மிகப்பிரபலம், இவருடைய இசையை மட்டுமே நம்பி பல நாட்கள் ஓடிய படங்களும் இங்கு உண்டு.
ஆனால் இளையராஜா கடந்த சில வருடங்களாகவே பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றார் என்று தான் கூறவேண்டும். குறிப்பாக தனது பாடல்களுக்கு ராயல்டி வேண்டும் என்று அவர் பல இடங்களில் ஆவேசமாக பேசிய பிறகு தொடர்ச்சியாக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றது.
மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் இடத்தில் சட்டென்று பிறரை மட்டம்தட்டி பேசுவது உள்ளிட்ட சில விஷயங்களை அவர் தொடர்ச்சியாக செய்து வருவது பலரை முகம் சுளிக்க வைக்கிறது. இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இளையராஜா ஒரு மட்டமான மனிதர் என்று கூறியுள்ளார்.
ஒரு மனிதன் ஆன்மிகத்திற்குள் ஆழமாக செல்லும்போது அவருக்கு சகிப்புத்தன்மை, முதிர்ச்சி ஆகியவை அதிகமாகவேண்டுமே அன்றி அது இல்லாமல் போகக்கூடாது. இளையராஜா ஆன்மிகத்திற்கும் செல்ல செல்ல அவர் இவற்றையெல்லாம் இழந்துவருகின்றார் என்றும் கூறினார்.