Search
Search

“எப்படி இவ்ளோ யங்கா இருக்கீங்க” : விஜய் ஆண்டனிக்கு இவ்வளவு பெரிய மகளா? – வைரலாகும் புகைப்படம்

சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நாடகம் தான் இவருடைய முதல் கேமரா அணுபவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுக்ரன் என்ற படத்தின் மூலன் கடந்த 2005ம் ஆண்டு திரையுலக பிரவேசம் அடைந்தவர் தான் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இயக்குனர் என்று பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி. 2002ம் ஆண்டு ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நாடகம் தான் இவருடைய முதல் கேமரா அணுபவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 18 ஆண்டுகளில் பல சூப்பர் ஹிட் படங்கள் மற்றும் பாடல்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனிக்கு ரசிகர் கூட்டம் அதிகம். என்னேரமும் சினிமாவில் தனது தாக்கத்தை பதித்துக்கொண்டே இருக்கும் விஜய், தனது குடும்பத்தை தனது திரைவாழ்க்கையில் இருந்து தள்ளியே வைத்திருக்கிறார் என்று தான் கூறவேண்டும்.

இவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்றபோது அவரை பெரிய அளவில் பொது வெளியில் பார்க்கமுடியாது. இந்நிலையில் 50 வயதை நெருங்கப்போகிறார் விஜய் ஆண்டனி என்றால், உங்களால் நம்ம முடியுமா? ஆனால் உண்மை அதுதானே, விஜய் ஆண்டனிக்கு வயது இப்பொது 47.

இந்நிலையில் அவரது மனைவி பாத்திமா தங்களுடைய மகள் மீரா விஜய் ஆண்டனியின் புகைப்படம் ஒன்றை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா என்று ஆர்ச்சர்யப்படுகின்றனர் அவரது ரசிகர்கள்.

You May Also Like