சோம்பை இப்படி பயன்படுத்துங்க….உடல் எடை வேகமாக குறையும்..!

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என பல முயற்சிகளை எடுப்பது வழக்கம். உடல் எடையைக் குறைப்பதற்கு சில எளிய வீட்டு மருத்துவப் பொருட்களும் உள்ளன. அதில் சோம்பு உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது.

சோம்பு விதைகளில் உள்ள டையூரிக் பண்புகள் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. அதோடு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகின்றன.

இந்த இரண்டு குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் பின்பற்றவும்.

சோம்பு நீர்

ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீரை ஊற்றி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் ஊற வைத்த சோம்பு நீரை ஒரு டம்ளர் எடுத்து, கொதிக்க வைத்து வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மீதமுள்ள சோம்பு நீரை மாலையில் சுடவைத்து குடிக்கலாம்.

சோம்பு டீ

ஒரு பாத்திரத்தில் 3/4 கப் நீரை ஊற்றி அதில் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்த பிறகு அதில் ஒரு டீஸ்பூன் டீ தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் வெல்ல பொடியை சேர்த்து கொதிக்க விடவும்.

பின்பு அதில் கால் கப் பால் ஊற்றவும். பால் நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு, 5 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மூடியைத் திறந்து, டீயை வடிகட்டி குடிக்கவும். இதனால் உடல் எடை வேகமாக குறையும்.

Recent Post