உங்கள் கிட்னி ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

நமது உடலில் சிறுநீரகம் என்பது மிக முக்கியமான உறுப்பாகும். நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்துவதுதான் சிறுநீரகத்தின் வேலை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் உடலில் நச்சுக்கள் கலந்து நமது ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.

இந்த சிறுநீரக பிரச்சனை சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதிக உடல் பருமன் கொண்டவர்களை எளிதில் தாக்கும். சிறுநீரகத்தை பாதுகாப்பது நமது கடமை. எனவே உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

பூண்டு

Advertisement

பூண்டில் ஏராளமான நன்மைகள் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுகளில் பூண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் சிறுநீரக குழாய்களில் ஏற்படும் தொற்றுகளை நீக்கி சிறுநீரகத்தை பாதுகாப்பாக இயங்க வைக்கிறது.

இஞ்சி

இஞ்சியில் உள்ள அமிலங்கள் சிறுநீரக செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது. இஞ்சி உடலில் உள்ள ரத்த குழாய்கள் மற்றும் சிறுநீரகத்தை சுத்தப்படும் ஆற்றல் கொண்டது. இஞ்சி நல்ல ஜீரண சக்தியை தரும். உடலில் ஜீரணம் நன்றாக நடந்தாலே உடலின் அனைத்து பாகங்களும் நன்றாக இயங்கும்.

திராட்சை பழம்

திராட்சை பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. திராட்சை பழம் சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். திராட்சையில் உள்ள அமிலங்கள் சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

கொத்தமல்லி

சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் கொத்தமல்லி சிறந்த மருந்தாக பயன்படுகிறது. கொத்தமல்லியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரகம் நன்றாக செயல்படும்.

முட்டைகோஸ்

உடலுக்கு பல நன்மைகளை தரும் உணவு வகைகளில் முட்டை கோசும் உண்டு. ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு முட்டை கோஸ் நல்ல உணவு. முட்டை கோஸில் வைட்டமின் கே, வைட்டமின் பி 6, வைட்டமின் பி 12 ஆகிய சத்துக்கள் உள்ளது. எனவே முட்டைகோஸ் உணவில் அடிக்கடி சேர்த்து வர வேண்டும்.

மீன்

மீனில் உள்ள ஒமேகா 3 அமிலங்கள் சிறுநீரக நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. ஒமேகா 3 அமிலங்கள் அதிகம் உள்ள மீன்களை வறுக்காமல் குழம்பு வைத்து வாரம் இரண்டு முறை சாப்பிடுவது சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.

சின்ன வெங்காயம்

வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கலாம். அடிக்கடி சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவது சிறுநீரகங்களுக்கு நல்லது.

சிறுநீரகத்தை பாதுகாக்க மேலும் சில டிப்ஸ்

சாப்பாட்டில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.

சிகரெட், மது பழக்கத்தை முழுவதும் ஒழிக்க வேண்டும்.

சிறுநீரை நீண்ட நேரம் அடக்க கூடாது.

குளிக்கும் போது அடிக்கடி இனப்பெருக்க உறுப்பை சுத்தம் செய்தல் வேண்டும்.

சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை சரியான முறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்த வேண்டும்.

தினமும் நடை பயிற்சி, உடற்பயிற்சி செய்து வர வேண்டும்.

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாகவே மருந்து கடைகளில் சென்று மாத்திரை வாங்கி சாப்பிடும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

இவைகளை சரியாக பின்பற்றி வந்தால் உங்களின் சிறுநீரகம் எந்த பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இயங்கும்.