ஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்

நமது உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது நமது கடமையாகும். ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டும்.

புகைப்பழக்கம் மற்றும் மது பழக்கத்தை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆண்களின் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இதை அடிக்கடி சாப்பிடும் போது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம், நரம்புகள், இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்கிறது.

வாழைப்பழத்தில் உள்ள மக்னீசியம் பக்கவாதத்தை தடுக்கிறது. வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்ளும்.

மீன்

மீன் ஆண்களுக்கான சூப்பர் உணவு. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்கிறது. இதயத்தை பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. புரோஸ்டேட் புற்று நோய் அபாயத்தை குறைக்கிறது. ஆண்கள் சிக்கன், மட்டன் அதிகம் சாப்பிடுவதற்கு பதிலாக அடிக்கடி மீன் சாப்பிடுவது நல்லது.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளது. இவை புற்றுநோய் வருவதை தடுக்கும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ப்ரோக்கோலியில் இருக்கும் சல்போரபேன் சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது.

திராட்சை

திராட்சையில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. திராட்சை பழத்தை ஆண்கள் உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு சாப்பிடுவது நல்லது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் கெட்டிப்படும்.

கிவி

கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது உடல் செல்கள் பாதிப்பு குறைக்கப்படுகிறது. இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கிறது. கிவி பழம் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து ரத்தம் சம்பந்தமான பிரச்சினைகளை வர விடாமல் தடுக்கும்.

பப்பாளி

பப்பாளி பழம் ஆண்களுக்கு மிகவும் நல்லது. இதிலுள்ள அர்ஜினைன் என்ற நொதி இனப்பெருக்க மண்டலத்தில் இரத்த ஓட்டத்தை தூண்டி விடும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். எனவே பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

Recent Post