பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவுகளை வைத்து சாப்பிடுவது நல்லதா?

சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடியவை என்றாலும் அவை பல்வேறு நோக்கங்களுக்காக பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனப் பொருட்கள் உணவுப் பொருட்களில் கலந்து உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பலரும் கவனத்தில் கொள்வதில்லை.

டைதைல் ஹெக்ஸைல் பித்தலேட் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். மேலும் ஹார்மோன் செயல்பாடுகளை சீர்குலைக்கும். இது படிப்படியாக தைராய்டு பாதிப்புக்கு வழிவகுத்துவிடும்.

Advertisement

மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பதற்கு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் முக்கிய காரணமாகும். கடந்த 10 ஆண்டுகளில் மார்பகப் புற்றுநோய் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு தினசரி புழக்கத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துக்கொண்டிருப்பதே காரணம் என ஹார்வர்ட் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவை உட்கொள்வது அல்லது உணவை சூடாக்க பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிளாஸ்டிக்கில் பைபினைல் ஏ உள்ளது. இது உடல் பருமன், நீரிழிவு, புற்றுநோய், ஆஸ்துமா, கருத்தரிப்பில் சிக்கல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.

எனவே சூடான உணவு வகைகளை பிளாஸ்டிக் பொருட்களில் அடைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக பீங்கான், எக்கு அல்லது கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்தலாம்.