இந்த உணவுகளை சாப்பிட்டால் தலைவலி வரும்

ஆரோக்கியமில்லாத வாழ்க்கை, பணிச்சுமை, மனஅழுத்தம் போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படும். ஆனால் அதனால் மட்டும் தலைவலி ஏற்படுவதில்லை. ஒரு சில உணவுகளை உண்பதாலும் தலைவலி வரும். சிலருக்கு உண்டப்பின் தலைவலி அதிகம் வரும்.

சோயா சாஸ் : இப்போதெல்லம் நிறைய உணவுகளில் சுவைக்காக சோயா சாஸ் பயன்படுத்துகின்றனர். சோயா சாஸில் மோனோசோடியம் குளுட்டமேட் என்னும் பொருள் உள்ளது. இதனால் சோயா சாஸ் கலந்த உணவுகளை சாப்பிடும்போது தலைவலியை ஏற்படுத்தும். மேலும் இதில் உப்பு அதிகம் உள்ளதால் உடலில் வறட்சியை ஏற்படுத்தும்.

ஐஸ் க்ரீம் : ஐஸ் க்ரீம் அனைவருக்கும் பிடித்த உணவு. குறிப்பாக கோடைகாலங்களில் அதிகம் விரும்பி சாப்பிடுவது இந்த ஐஸ் க்ரீம்தான். உடல் சூடாக இருக்கும் போது ஐஸ் க்ரீம் அல்லது ஐஸ் வாட்டர் சாப்பிடுவோம். இதனால் உடலில் இருக்கும் இரத்தக் குழாய்கள் சுருங்கி விடுகிறது. இதனால் போதிய இரத்த சுழற்சி இல்லாமல் தலை ஏற்படுகிறது.

காபி : காபி குடித்தால் தலைவலி குறையும் என நினைத்து வேலைபார்க்கும் இடங்களில் காபி குடிக்கும் பழக்கம் உண்டு. இது முற்றிலும் தவறு. காபியில் இருக்கும் காப்பைன் என்னும் பொருள் உடலில் மெக்னீசியமாக மாறும் போது தலைவலி உருவாகும்.

மதுபானம் : மதுபானங்கள் எல்லாமே தலைவலியை ஏற்படுத்தும். குறிப்பாக ரெட் ஒயின் அதிகமான தலைவலியை உருவாக்கும். ஏனென்றால் இதில் சல்பைட் அளவுக்கு அதிகமாக உள்ளது. நீங்கள் அருந்தும் மதுபானம் உடலில் ரத்த ஓட்டத்தை சரியான அளவில் ஓட செய்யாமல் தலைவலியை ஏற்படுத்தும்.

சீஸ் : சீஸில் உள்ள தைரமின் என்ற நொதிப்பொருள் உடலில் ரத்த அழுத்தத்தை உருவாக்கும். இதனால் தலைவலி ஏற்படும். எனவே சீஸ் சாப்பிடும் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.

Recent Post