உடலுக்கு அதிகமான சத்துக்கள் தரும் சிறந்த உணவுகள்

0
388
எந்த உணவில் உடலுக்கு தேவையான அதிகமான சத்துக்கள் அடங்கியுள்ளதோ அது சிறந்த உணவுகள் தான்.
அப்படி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சில சிறந்த உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ப்ராக்கோலி
ப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் A சத்து, திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது, வைட்டமின் K சத்து, எலும்புகளின் வலிமை மற்றும் இதய ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உதவுகிறது.
மேலும் இதில் உள்ள வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
ப்ராக்கோலி சாப்பிட்டால், உடலில் ஏற்படும் கட்டிகளை குறைக்கலாம்.
ப்ளுபெர்ரி
இதில், ஆன்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின் C, வைட்டமின் E நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது, அதுமட்டுமின்றி புற்றுநோய், நரம்பியல் நோய் சிறுநீர்ப்பை அழற்சி, மற்றும் இதய பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.
ஒரு கப் ப்ளூபெர்ரியில் 83 கலோரி நிறைந்துள்ளது. எனவே உடம்பில் உள்ள கொழுப்பினை குறைக்க உதவுகிறது.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்யில் குறைந்த அளவிலான கொழுப்பு உள்ளதால், இரத்த அழுத்தம் மற்றும் இதயநோய்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.
ஆன்டி ஆக்ஸிடண்ட், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
சமையலுக்கு ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தினால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
எண்ணெய் மீன் (Oily Fish)
இதில் உள்ள ஒமேகா 2 பேட்டி ஆசிட் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது, மேலும் வலிமையான எலும்புகள், மூளையின் செயல்திறன், இதய ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உதவுகிறது.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக்கொண்டால், உங்கள் பணிகளை சிறப்பான முறையில் முடிப்பதற்கான ஆற்றல் கிடைக்கும்.
தயிர் (Yogurt)
இது ஒரு புரோபயாடிக் என்பதால் உடலில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது, மேலும் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
மேலும், புரோட்டின், கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
ஒரு நாளைக்கு 700மிகி தயிர் எடுத்துக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here