குழந்தைகள் களைப்பில்லாமல் இருப்பதற்கு கொடுக்க வேண்டிய உணவுகள்..!

முன்னுரை:-

குழந்தைகள் களைப்பில்லாமல் இருப்பதற்கு பெற்றோர்கள் கொடுக்க வேண்டிய உணவு வகைகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

விளக்கம்:-

Advertisement

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருவதால், டிசம்பர் வரை பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இந்த முறையில் படிப்பது மாணவர்களுக்கு புதியது என்பதால், அவர்கள் களைப்பாக வாய்ப்பு இருக்கிறது.

எனவே குறிப்பிட்ட சில உணவு வகைகளை அளிப்பதன் மூலம் அவர்களின் மனமும், உடலும் களைப்பாகாமல் வைத்துக்கொள்ள முடியும். அந்த உணவு வகைகள் பற்றி தற்போது பார்ப்போம்.

உணவு வகைகள்:-

1. காலை நேரத்தில், மாம்பழம், வாழைப்பழம், பப்பாளி போன்ற பழங்களையும், அதோடு சேர்த்து இட்லி, அவுல் போன்ற உணவுப்பொருட்களையும் தாருங்கள்.

2. மதிய உணவு எப்போதும் போல கொடுத்துவிடுங்கள். மதிய உணவு முடிந்து சில மணி நேரங்கள் கழித்து, தயிர் மற்றும் கருப்பு திராட்சையை கொடுங்கள். இந்த இரண்டு உணவுப்பொருட்களிலும், இரும்புத் சத்து அதிகமாக இருப்பதால், இவற்றை சாப்பிடுவது சிறந்தது.

3. இரவு 7 மணிக்கே குழந்தைகளுக்கு சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். இட்லி, தோசை, அடை, ராகி போன்ற உணவுகளை அளிக்கவும்.

4. உறங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன், மஞ்சள் பால் கொடுக்கவும். இது குழந்தைகளுக்கு மனம் மற்றும் உடல் அளவில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.