பேரழகாக மாற வேண்டுமா..? பூண்டு இருக்கு கவலையில்லை..!

பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது.

பூண்டு பற்றி அழகுக்குறிப்பு

  1. முகப்பரு
  2. முகத்தில் புள்ளிகள்
  3. பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் தழும்புகள்
  4. சரும அரிப்பு
  5. முகச்சுருக்கங்கள்

முகப்பரு

Advertisement

முகப்பரு பிரச்சனைக்கு பூண்டு ஒரு சிறந்த நிவாரணி ஆகும். பூண்டின் தோலை உரித்து, அதனை நன்றாக மைய நசுக்கி, சாறாக்கி, அந்த சாற்றை முகத்தில் தடவி வந்தால், முகப்பரு பிரச்சனை தீர்வுக்கு வரும்.

முகத்தில் புள்ளிகள்

முகத்தில் புள்ளிகள், திட்டுகள் இருப்பது பெரும்பாலான இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் உள்ள பிரச்சனை ஆகும். இதனை தீர்ப்பதற்கும், பூண்டு ஒரு சிறந்த பொருள். அதாவது, பூண்டோடு தக்காளியை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பி;ன்னர், அவற்றை முகத்தில் தடவி விட்டு, 10 நிமிடங்களுக்கு பின்னர், கழுவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால், முகத்தில் இருக்கும் புள்ளிகளும், திட்டுகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் தழும்புகள்

பிரசத்தின்போது பெண்கள் வயிறு பெரிய அளவில் இருக்கும். குழந்தை பிறந்த பிறகு, அவ்வளவு பெரிய வயிறு சுருங்கி விடும். இதன்காரணமாக, வயிற்றுப் பகுதியில், சில தழும்புகள் ஏற்படும். அதனை போக்குவதற்கு, பூண்டுவை பயன்படுத்தலாம். பூண்டு சாறுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கி தழும்பு இருக்கும் இடங்களில் தடவி வந்தால், தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.

சரும அரிப்பு

உச்சந்தலை, முழங்கைகள், முழங்கால்களில் சிலருக்கு சருமம் சிவத்தல், அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இத்தகைய சரும அழற்சிக்கு பூண்டுவை நசுக்கி சருமத்தில் தடவி வரலாம்.

முகச்சுருக்கங்கள்

வயதானவர்களுக்கு முகச்சுருக்கங்கள் வருவது என்பது இயல்பான விஷயம் தான். ஆனால், இளம் வயதினரே பலர், இந்த விஷயத்தால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும், பூண்டு சாறு, தேன், எலுமிச்சை சாறு ஆகியவற்றை, ஒரு டம்பளர் நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், முகச்சுருக்கம் நீங்கும். என்றும் இளமையாக இருக்கலாம்.