வெள்ளைப் பூண்டின் மருத்துவ குணங்கள்

பூண்டு சிறந்த உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. சுவைக்காக சேர்க்கப்படும் பூண்டில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
பூண்டில் தாதுக்களும் வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளது. மேலும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் உள்ளது.

வாயுக்கோளாறு
வாயுக்கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளைப்பூண்டு, மிளகு, பனைவெல்லம் சேர்த்து தலா இரண்டு கிராம் அளவு எடுத்து சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் நீங்கும். பூண்டு பற்களை பசும்பாலில் போட்டு வேக வைத்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.
மார்புச்சளி
மார்புச் சளியால் அவதிப்படுபவர்களுக்கு பூண்டு நல்ல மருந்தாக பயன்படுகிறது. மூன்று வெள்ளைப்பூண்டு, கால் ஸ்பூன் கடுகு இரண்டையும் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி அதனை வடிகட்டி நெஞ்சுப் பகுதியில் தடவி வந்தால் மார்புச்சளி நீங்கும்.
உடல் எடை குறைய
3 மிளகு, சிறிதளவு ஓமம், 2 பூண்டு இவைகளை ஒன்றாக சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து உடல் பருமன் குறையும்.
நீர்க்கடுப்பு
பூண்டு பற்களை வெள்ளாட்டுப் பாலில் போட்டு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு, சீதபேதி இரண்டுமே குணமாகும்.
காது வலி
10 பல் பூண்டை நல்லெண்ணையில் சேர்த்து காய்ச்சி ஆற வைத்த பிறகு அந்த எண்ணெயை சிறிதளவு காதுகளில் விட்டால், காது வலி குணமாகும்.
பூண்டின் தீமைகள்
பூண்டை பச்சையாக சாப்பிட்டால் தலைவலி உண்டாகும். எனவே பூண்டை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அளவுக்கு அதிகமாக பூண்டு சேர்த்துக்கொண்டால் சருமத்தில் அரிப்பு அல்லது தடிப்பு உருவாகும்.
பூண்டை உறிக்கும்போது அல்லது வெட்டும்போது கையுறைகள் அணிந்து கொள்ள வேண்டும்.
பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும்..?
பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை வேகமாக குறையும்..
பூண்டை நாம் வெறும் வயிற்றில் பச்சையாக தினமும் சாப்பிட்டு வந்தால், அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகளும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் சரியாகும்.
பூண்டை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஒரு ஜாடியில் சுத்தமான தேனை ஊற்றி அதில் பூண்டுகள் போட்டு ஒரு வாரம் ஊற வைக்கவும்.
உடல் எடை அதிகரிக்கவும், குறைக்கவும் இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயன்படுகிறது.
உடல் எடையை குறைக்க தண்ணீரிலும், உடல் எடையை அதிகரிக்க பாலில் தேன் கலந்து பருகலாம்.
தேனில் ஊறவைத்த பூண்டை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற தொற்று கிருமிகள் ஏற்படாமல் தடுக்கிறது.
பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்று நோய்களையும் இது தடுக்கிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.
ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை அரை டீஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும். உணவு உண்ட பிறகு சாப்பிடுவதைவிட, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
இது போன்று மருத்துவம் மற்றும் காய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.