Connect with us

TamilXP

இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

health tips in tamil

மருத்துவ குறிப்புகள்

இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இது சமையல் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.

இஞ்சி செடியின் வேரைத்தான் நாம் இஞ்சியாக சாப்பிடுகிறோம். இதில் ஜிஞ்சரால், ஜிஞ்சிபெய்ன், மாவுசத்து, புரோட்டீன் அதிகம் உண்டு.

இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளன. வயிற்றுக் கோளாறுகளை சரி செய்வதற்கும் வாந்தியை நிறுத்துவதற்கும் இதை 2 ஆயிரம் ஆண்டுகளாக மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர் சீனர்கள்.

சிறுநீரகப் பாதை சம்பந்தமான தொற்றுநோய்களை குணப்படுத்த இஞ்சியை உபயோகித்தனர். மருத்துவர்கள் மூட்டு வலிக்கு இஞ்சி சிறந்த மருந்து என நவீன மருத்துவமே ஒப்புக் கொண்டிருக்கிறது.

261 மூட்டுவலி நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் தினமும் இரண்டு வேளை சில சொட்டுகள் இஞ்சிச் சாறு உட்கொள்ளும் நோயாளிகளுக்கு மூட்டுவலியிலிருந்து நல்ல நிவாரணம் கிடைத்ததாம்.

வாந்தியை சமாளிக்கும் ஆற்றலையும் தரவல்லது இஞ்சி. கருவைச்சுமக்கும் அதிர்ஷ்டம் வாய்க்கும் பெண்களில் முக்கால்வாசி பேருக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் இனிமையான அவஸ்தை.

கர்ப்பம் என்றால் காலையில் தூங்கி எழுந்ததும் குமட்டிக் கொண்டு வரும் வாந்தி தான் அவஸ்தைக்குக் காரணம். வாந்தியைத் தடுக்கும் மருந்து எதையாவது எடுத்துக் கொள்ளலாம் என்றால், அந்த மருந்தால் கருவிலிருக்கும் சிசுவுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் என்ன செய்வது? என்ற பயம் நம் முன் நிற்கிறது.

பக்க விளைவுகள் இல்லாத வாந்தி தடுப்பு மருந்தாக இஞ்சியை பயன்படுத்தலாம். இஞ்சி மசக்கை வாந்தியையும் தவிர்க்கும் அருமருந்தாக பயன்படுகிறது.

புற்று நோய்

இஞ்சியில் உள்ள காரத்தன்மை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழித்து புற்றுநோய் வரவிடாமல் பாதுகாக்கிறது. ஆண்கள் இஞ்சி சாறை பருகினால் புரோஸ்டேட் என்ற புற்றுநோய் வராது.

மூளை பாதுகாப்பு

இஞ்சியில் உள்ள ஃபீனால் மற்றும் ப்ளேவோனாய்டுகள் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும். மூளைக்கு புரோட்டின் அளவை அதிகரிக்கச் செய்து மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இதனால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுகிறது.

சர்க்கரை நோய்

இஞ்சிச் சாறு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு டம்ளர் இஞ்சி சாறு பருகி வந்தால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

செரிமான பிரச்சனை

இஞ்சி சாறு பருகி வந்தால் செரிமான பிரச்சனை நீங்கி நல்ல பசியை ஏற்படுத்தும். மேலும் வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும்.

இஞ்சியின் மேலும் சில மருத்துவ குறிப்புகள்

இஞ்சி, உப்பு, சீரகம் – மூன்றையும் ஒன்றாகக் கலந்து அரைத்துச் சாப்பிட்டு சுடுநீர் குடித்தால் வயிறு உப்புசம் குணமாகும்.

இஞ்சி, மாங்காய் – இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டால் இழுப்பு, காய்ச்சல், விக்கல் ஆகியவை குணமாகும்.

இஞ்சியைக் காயவைத்துப் பொடி செய்து தண்ணீரில் குழைத்து நெற்றியில் தடவினால் தலைபாரம், ஜலதோஷம் போன்றவை குணமாகும்.

இஞ்சிச் சாற்றில் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலைக்குத் தேய்த்துவந்தால் தலைவலி குணமாகும்.

இஞ்சி போட்டுக் கொதிக்கவைத்த தண்ணீரில் குளித்தால் உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள் உடைந்து குணம் கிடைக்கும்.

இஞ்சியைத் தோல் நீக்கி, உப்பைத் தொட்டுச் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.

இஞ்சிச் சாற்றில் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து, சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.

இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு – இரண்டையும் தலா பத்து மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து குடித்தால், வாந்தி உடனே நிற்கும்.

இஞ்சிச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்துக் காயவைத்து எடுத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குணமாகும்.

இது போன்று மருத்துவம் மற்றும் காய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

To Top