Search
Search

இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ginger health benefits in tamil

இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இஞ்சியில் வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அதிகம் இருக்கின்றன.

இஞ்சி டீ அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

சுவாசக் கோளாறுகள்

சுற்றுச்சூழல், மாசு காரணமாக ஏற்படும் சுவாசப் பிரச்னைகள் வராமல் காக்கும். சளி பிடிக்கும் போது ஏற்படும் சுவாசக் கோளாறுகளைக் குறைக்கும்.

மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்

இஞ்சியில் உள்ள சத்துக்கள் ரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்தில் கொழுப்பு சேர்வதைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்.

வாந்தியை போக்கும்

நீண்ட தூரம் பயணம் செய்யும் போது சிலருக்கு வாந்தி அல்லது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். இதனை தடுக்க இஞ்சி டீ அருந்துவது நல்லது. இஞ்சி டீ குடித்தால் உடனடியாக வாந்தி வருவதைத் தடுக்கலாம்.

ஜீரண சக்தி

சாப்பிடும் உணவுகள் நன்றாக செரிமானம் ஆவதற்கு இஞ்சி டீ பயன்படுகிறது. உணவு எளிதில் ஜீரணம் ஆவதால் பசியின்மை நீங்கி நல்ல பசி எடுக்கும்.

புற்றுநோய்

இஞ்சியில் உள்ள காரத்தன்மை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழித்து புற்றுநோய் வரவிடாமல் பாதுகாக்கிறது.

You May Also Like