மின் கட்டணம் குறைப்பு – தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு அண்மையில் மின்சார பயன்பாட்டிற்கான கட்டணத்தை அதிகரித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மின்கட்டண உயர்வால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கலாம் என முடிவு செய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.