அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில்

ஊர்: சிதம்பரம்

மாவட்டம்: கடலூர்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : கோவிந்தராஜப்பெருமாள்

தாயார் : புண்டரீகவல்லி

ஸ்தலவிருட்சம்: மகிழ மரம்

தீர்த்தம்: 12 தீர்த்தங்கள்

சிறப்பு திருவிழாக்கள்: சித்திரையில் 10 நாட்கள் வசந்த உற்சவம் மற்றும் கஜேந்திர மோட்ச விழா

திறக்கும் நேரம்: காலை 6:30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை.

Sri Govindaraja Perumal Temple, Thiruchitrakoodam

தல வரலாறு

சிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக இருந்தமையால் ஆனந்த நடனம் ஆடினர். அப்போது இருவரில் யார் சிறப்பாக ஆடியது என சந்தேகம் எழுந்தது. ஆகவே பிரம்மனிடம் கேட்டனர், அவரால் சரியாக சொல்ல முடியவில்லை. பிறகு மகாவிஷ்ணுவிடம் கேட்டனர். விஷ்ணு தேவசிற்பியான விஸ்வகர்மாவை இங்கு ஒரு சித்திரை சபையை அமைத்து, அதில் நடனம் போட்டியை நடத்த கூறினார். நடனப் போட்டி ஆரம்பமானது.

சிவன் ஆனந்தத்துடன் தாண்டவம் ஆடினார். பார்வதிதேவியும் அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் சிறிதும் சோர்வடையாமல் ஆடினார். இறுதியில் தன் வலக்காலை தூக்கி தலைக்கு மேல் நிறுத்தினார் சிவன். பார்வதியால் காலைத் தூக்கி ஆட இயலவில்லை. எனவே விஷ்ணு சிவனை வெற்றி பெற்றதாக அறிவித்தார். அவ்வேளையில் விஷ்ணுவுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் பிரம்மன் நின்று கொண்டிருந்தாராம். எனவே இத்தலத்தில் பிரம்மா நின்ற கோலத்தில் இருக்கிறார்.

Sri Govindaraja Perumal Temple, Thiruchitrakoodam

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 41 வது திவ்ய தேசம். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக இருப்பது சிறப்பு. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பள்ளிகொண்ட பெருமாளாக காட்சி கொடுக்கிறார். அசுர குலத்தை சேர்ந்த டில்லி என்பவள் தான் மரங்கள் நிறைந்த வனமாக இருக்க தவம் புரிந்தால். ஆகவே சிதம்பரத்தில் தில்லை மரங்களாக வளர்ந்து நின்றாள். எனவே இவ்வூர் தில்லை எனப்பட்டது.

தாயார் புண்டரீகவல்லி தனி சன்னதி உள்ளது. பெருமாள் சன்னதிக்கு முன் மண்டபத்தில் நின்று பார்த்தால் நடராஜர், கோவிந்தராஜர் மற்றும் அவரது நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.