பிக்பாஸ் வீட்டில் ஜி.பி.முத்து வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆரம்பத்தில் ஜி.பி.முத்துவை மக்கள் எவ்வளவு மோசமாக பேசினாலும் போக போக அவருக்கு ரசிகர்களாக மாற தொடங்கிவிட்டனர். இந்நிலையில் கடந்த அக்டோபர்-9ம் தேதி விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கியது.
இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் பங்குபெற்றுள்ளனர். அதில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஜி.பி.முத்துவும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஜி.பி.முத்து தான் என்று அவருடைய ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அவர் தனது மகனுக்காக நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதே நேரத்தில் மகனுக்காக நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பணத்தையும், புகழையும் தூக்கி வீசி மக்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்துவிட்டார்.
பிக்பாஸ் வீட்டில் இரண்டு வாரங்கள் மட்டுமே இருந்த ஜி.பி.முத்துவிற்கு ரூ.2,10,000 சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது.
வெறும் 14 நாளில் இவர் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியிருப்பது அனைவரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.