சீயான்.. சீயான் தான் – தங்கலான் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல் – சூப்பர் Birthday gift ரஞ்சித் சார்!

சீயான் விக்ரம், தமிழ் திரையுலகில் ஒருவரை நாம் உலக நாயகனோடு சற்று ஒப்பிட்டு பார்க்கமுடியும் என்றால் அது நிச்சயம் அவர் மட்டும் தான். டப்பிங் ஆர்டிஸ்டாக தனது கலை பயணத்தை துவங்கி இன்று அவர் நிற்கும் உயரம் வேற லெவல்.
சின்னத்திரை நடிகராக இவர் முதன் முதலில் அறிமுகமானது 1988ம் ஆண்டு, அதன் பிறகு வெள்ளித்திரையில் கதையின் நாயகனாக அறிமுகமானது 1990. ஆகமொத்தம் சுமார் 33 ஆண்டுகளாக தான் நடிக்கும் அனைத்து படத்தையும் தன் முதல் படமென எண்ணி நடித்து வரும் மாபெரும் கலைஞன்.
பிதாமகன் படத்திற்காக தேசிய விருது பெற்ற இந்த நடிகன் இன்று பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திர திரைப்படமான தங்கலான் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு தங்கலான் படக்குழு ஒரு அன்பு பரிசை அளித்துள்ளது.
அந்த படத்திற்காக அவர் எப்படி தயாரானார் மற்றும் படப்பிடிப்பு எப்படி நடந்து வருகின்றது என்பது குறித்த காணொளி தான் அது. ரசிகர்கள் பலரும் அவருடைய பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.