Search
Search

“என் ஆசை மகனே நீடுடி வாழ்க” : லோக்கியின் பிறந்தநாளில் மெய்சிலிர்க்க வைத்த சஞ்சய் தத்

முன்னனுபவம் இல்லை, யாரிடமும் உதவி இயங்குநராக இருந்ததில்லை என்பதே இவருடைய மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவின் “Most Wanted” இயக்குநராக வலம்வருபவர் தான் லோக்கி என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் லோகேஷ் கனகராஜ். LCU எனப்படும் லோக்கி சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்ற ஒன்றை ரசிகர்கள் உருவாக்கி இவரை புகழ்ந்து வருவது உண்மையில் பலருக்கு கிடைத்திடாத ஒரு அன்பு வரமென்றே கூறலாம்.

முன்னனுபவம் இல்லை, யாரிடமும் உதவி இயங்குநராக இருந்ததில்லை என்பதே இவருடைய மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. மாநகரத்தில் தொடங்கி இன்று லியோ-வரை எல்லாமே எதிர்பார்ப்பின் உச்சம் என்றே கூறலாம்.

விக்ரம் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து தற்போது மீண்டும் லோக்கி, தளபதி விஜய் நடிப்பில் லியோ என்ற படத்தை உருவாக்கி வருகின்றார். கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்களை கொண்டு இந்த படம் உருவாகி வருகின்றது. இது LCU படங்களுக்குக்கீழ் வரவில்லை, இது ஒரு Stand Alone படம் என்பதை லோக்கி ஏற்கனவே உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் லோகேஷுக்கு இந்த படத்தில் நடித்துவரும் பாலிவுட் உலகின் உச்ச நட்சத்திரம் சஞ்சய் தத் தனது மனதார வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட டீவீட்டில் என் சகோதரனே, என் மகனே, என் குடும்பத்தில் ஒருவரான லோகேஷ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

You May Also Like