Search
Search

ஆப்பிள் சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்

apple fruit benefits in tamil language

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள் மருத்துவரை தள்ளி வையுங்கள் என்று ஒரு பழமொழி உண்டு. காரணம் ஆப்பிளில் அவ்வளவு சத்துக்கள் உள்ளன. ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள் பற்றி பார்ப்போம்.

ஆப்பிளில் இரும்புச்சத்து பாஸ்பரஸ் உப்பு அதிகமாக இருக்கிறது. தினமும் பாலுடன் ஒரு ஆப்பிளும் எடுத்துக் கொண்டால் ரத்தசோகை நீக்கி உடலை பாதுகாக்கும்.

உடலைப் பாதுகாக்கும் நான்கு பழங்களில் ஆப்பிள் முதலிடம் வகிக்கிறது. அடுத்த இடங்களில் திராட்சை, வாழைப்பழம், அத்திப்பழம் போன்றவை இருக்கின்றன.

கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும்

தினம் இரண்டு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வேகமாக கரைத்து விடுகிறது.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ரத்தத்தில் வேகமாக கலந்து அதில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

ரத்த ஓட்டம் சீராகும்

ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் எனும் சத்து சுவாச செல்களை வலிமை ஆக்குகிறது. இதனால் நுரையீரலுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை சீராக வைக்க முடிகிறது.

மூட்டுகளை பாதுகாக்கும்

ஆப்பிளில் உள்ள யூரிக் அமிலம் வாதம் மற்றும் மூட்டு விக்க நோயாளிகளின் வலிகளைப் போக்குகிறது. அவித்த ஆப்பிளையும் வாத நோயாளிகள் சாப்பிட்டு வரலாம். அவித்த ஆப்பிளை சூட்டுடன் வலி உள்ள இடத்தில் கட்டினால் குணமடையும்.

புற்றுநோய் கிருமிகளை அழிக்கிறது

வயதாவதால் ப்ரீராடிக்கல் திரவம் அதிகம் சுரந்து செல்கள் பாதிக்கப்படுவதால் இதயம், சிறுநீரகம், நுரையீரல் பாதிப்புக்கு உள்ளகின்றன. அதற்கு, தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் ப்ரீராடிக்கல் திரவத்தை கட்டு படுத்தும் சத்தான வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கின்றன மேலும் புற்று நோயை உருவாக்கும் வாய்ப்பினை தடுக்கிறது.

கண்புரை நோயை தடுக்கிறது

ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் கண்புரை நோய் ஏற்படுவதை தடுக்கிறது.

இது போன்று மருத்துவம் குறிப்புக்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

You May Also Like