ஆரோக்கியமாக வாழ வைக்கும் ஆரஞ்சு பழம்

சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள பழங்களில் ஆரஞ்சு பழத்திற்கு தான் முதலிடம். ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கோப்பை பசும் பாலுக்கு இணையானது. இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு ஆரஞ்சுச் சாறு ஒரு அற்புத மருந்து. இரவு உணவிற்கு பிறகு, ஆரஞ்சு பழச்சாறு அல்லது இரண்டு ஆரஞ்சு பழத்தையோ சாப்பிட்டு வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழம் அல்லது பழச்சாறு குடித்து வந்தால் வயிற்றிலுள்ள செரிக்காத உணவு மற்றும் கழிவுகளை வெளியேற்றி பசியைத் தூண்டும். மலச்சிக்கல் செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு ஆரஞ்சு பழம் நல்ல மருந்து.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் உள்ளது. இது உடலில் உள்ள திசுக்களை புதுப்பிக்கின்றன. காய்ச்சல் நேரத்தில் காய்ச்சல் விரைந்து குணமாக ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு வரவும். இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும், மூலநோய், வயிற்றுப்பொருமல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

Advertisement

சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் போன்றவைகள் குணமாக ஆரஞ்சு பழச் சாறுடன், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தினால் போதும்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தி, மயக்கத்தை கட்டுப்படுத்த ஆரஞ்சு பழச்சாறு உதவுகிறது. ஆரஞ்சுப் பழம் ரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இளமைத் துடிப்புடன் வாழ தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுங்கள்.

மேலும் அனைத்து பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காணலாம்.