நாம் குடிக்கும் தண்ணீரை முறைப்படி குடித்தால் பல நோய்களை நம்மால் குணப்படுத்த முடியும்.
அதிகாலையில் காலைக்கடன்களை தொடங்கும் முன்பு 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி குடிக்க வேண்டும் முடியாதவர்கள் சில நிமிடம் இடைவெளி விட்டு குடிக்கலாம். இதேபோல் தினமும் காலை நேரத்தில் தண்ணீர் குடித்து வந்தால் ஒரே மாதத்தில் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். இரண்டு மாதங்களில் நீரிழிவு நோய் குணமாகும்
வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் தண்ணீர் மருத்துவத்தை கடைபிடித்தால் ஒரே வாரத்தில் சரியாகி விடும். மேலும், வாதம், மூட்டு வீக்கம் போன்ற நோய்களால் அவதிப்படுபவர்கள் ஒரு நாளைக்கு 3 தடவை 5 டம்ளர் வீதம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் கழித்து தான் இந்த தமிழ் மருத்துவத்தை கடைபிடிக்க வேண்டும். தண்ணீர் மருத்துவம் எடுத்துக்கொண்ட சில நாட்கள் கூடுதலாக சிறுநீர் பிரியும், பிறகு பழக்கத்துக்கு வந்து சரியாகிவிடும்.
தினசரி தண்ணீர் எடுத்துக்கொள்வதால் வயிறு சுத்தமாகிவிடும். உடலில் ரத்தம் பெருகும், இதனால் தலைவலி சைனஸ் தொல்லைகள் வரவே வராது. தினசரி தண்ணீர் குடித்துவந்தால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது செலவில்லா ஒன்று, இயற்கையான ஒரு மருத்துவமாகும்.