குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள்

குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். அதேநேரம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் நன்றாக இருக்க நல்ல சத்தான சரிவி உணவு மிகவும் அவசியம். அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்களையும் தடுக்கும். இந்த விஷயத்தில் நீங்கள் கீழ்க்கண்ட முறைப்படி உணவு அளிக்கலாம்.

குழந்தைகளுக்கு இட்லி, தோசை, பால் குறைவான மில்க் ஷேக், சப்பாத்தி, சாண்ட்விச், தானிய சுண்டல் முட்டை, பருப்பு சாதம், கலவை சாதம், பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக்க வேண்டும்.

நாள்தோறும் நான்கு அல்லது ஐந்து முறையாக பழங்களையும் கொடுங்கள்.புரதம் செறிந்த இறைச்சி, பருப்பு வகைகள் முட்டை போன்றவற்றை சரியான அளவில் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு நார்ச்சத்து மிகவும் முக்கியம். நார்ச்சத்து அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றை சாப்பிடக் கொடுங்கள்

எண்ணெயில் பொரித்த உணவுகளை விட ஆவியில் வேகவைத்த உணவுகள் நல்லவை. இனிப்பு சேர்த்த பழச்சாறுகள், சோடாக்களைக் கொடுக்காதீர்கள். அதற்குப் பதிலாக பாலையும் தண்ணீரையும் கொடுங்கள்

இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.

சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர் திராட்சை, வேக வைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு இரும்புச் சத்து, புரதச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஜீரண மானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம்.

இதைத்தவிர சிக்கன் சூப் வேகவைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்பு சாதம் கொடுக்கலாம். வளர வளர குழந்தைகளுக்குத் தேவையான சத்துகளும் (இரும்புச்சத்து கால்சியம் போன்றவை). அளவுகளும் மாறும். அதற்கேற்ப கவனித்து உணவளியுங்கள்.

Recent Post