5 நாட்களுக்கு கனமழை : இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெட்ர்ட்..!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழ் நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேக சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.