விறல் சுண்டினால் வரும் வித்தை.. வெளியானது வீரன் பட ட்ரைலர்!

இசையமைப்பாளராக தமிழ் திரை உலகில் அறிமுகமாகி அதன் பிறகு நல்ல பல திரைப்படங்களை கொடுத்து தற்பொழுது டாப் ஹீரோ லிஸ்டில் இணைந்திருப்பவர் தான் பிரபல நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. தற்போது அவருடைய நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் வீரன்.
தமிழில் பெரிய அளவில் இதுவரை சூப்பர் ஹீரோ படங்கள் வெளியானது இல்லை என்ற நிலையில், வீரன் திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ படமாக விரைவில் வெளியாக உள்ளது என்று தான் கூற வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு மரகத நாணயம் என்ற திரைப்படத்தை கொடுத்து மக்களை ஈர்த்த ஏஆர்கே சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி, வீரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது கிராமத்தை அழிக்க வரும் கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து எப்படி தன் கிராமத்தையும் வீரன் கோவிலையும் அவர் காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.
இப்பொழுது இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும்.