Search
Search

ஹிப் ஹாப் தமிழா ஆதி எடுக்கும் புதிய அவதாரம்.. “வீரன்”.. ஒரு தமிழ் சூப்பர் ஹீரோ படம் ரெடி

சூப்பர் ஹீரோ படங்கள் என்றாலே தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் உலக ரசிகர்களுக்கே சட்டென்று நினைவிற்கு வருவது ஒன்று மார்வல், இல்லையென்றால் DC தான். இதற்கு காரணம் இந்திய மொழிகளில் பெரிய அளவில் சூப்பர் ஹீரோ படங்கள் வெளியாகவில்லை என்பது தான்.

ஒரு காலகட்டத்தில் Marvelலை உருவாக்கிய ஸ்டான்லி, இந்தியாவிற்கும் ஓர் சூப்பர் ஹீரோவை உருவாக்கியதாகும், ஆனால் அன்றைய காலகட்டத்தில் அந்த படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இல்லாத நிலையில் அதை அவர் கைவிட்டதாகவும் கூறுவர்.

இந்நிலையில் மரகத நாணயம் என்ற ஜனரஞ்சக திரைப்படத்தை இயக்கி வெளியிட்ட ARK சரவணன் அவர்களுடைய இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படம் தான் வீரன். இது ஒரு தமிழ் சூப்பர் ஹீரோ திரைப்படமாக வெளியாக உள்ளது.

சத்யஜோதி நிறுவனத்தின் சார்பில் தியாகராஜன் இந்த படத்தை தயாரித்து வெளியிட, ஹிப் ஹாப் நாயகன் ஆதி இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக கலக்கவுள்ளார். நேற்று வெளியான தகவலின்படி எதிர்வரும் ஜூன் மாதம் 2ம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like