சுடுநீரில் குளிப்பது சரியா..? தெளிவான விளக்கம்..!

குளித்தல் என்பது மனித வாழ்க்கையின் அன்றாட நிகழ்வு ஆகும். உடல் புத்துணர்ச்சியாகவும், நோய் கிருமிகளை நீக்குவதற்கும், குளித்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். குளிப்பதிலேயே இவ்வளவு நன்மைகள் இருந்தால், சூடான நீரில் குளிப்பதில் எவ்வளவு நன்மைகள் இருக்கும். இதுகுறித்து தான் இந்த கட்டுரையில் நம் விளக்கமாக பார்க்க உள்ளோம்.

சுடுநீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்:-மிதமான அளவில் சுடுநீர் கொண்டு, சாதாரணமாக குளிக்கும் நேரத்தை விட, கூடுதலான நேரம் குளித்தால், 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வதற்கு ஈடாகும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், வாரம் ஒரு முறை இப்படி செய்து பலன் பெறுங்கள்.

சுடுநீரில் குளிப்பதால், மனம் அமைதியாகி, உடல் நெகிழ்ந்துவிடும். இதனால், உடலின் ரத்த ஓட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும். ரத்த ஓட்டம் சரியான அளவில் இருந்தால், இதயம் தொடர்பான எந்தவொரு பிரச்சனையும் நம்மை அண்டாது.

Advertisement

உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு, உடலின் தசைகள் அனைத்தும், இறுக்கமாக மாறிவிடும். அப்போது, மிதமான சுடுநீரில், ஒரு குளியல் போட்டீர்கள் என்றால், உடலின் இறுக்கம் குறைந்து, வலிகள் அனைத்தும் பறந்துவிடும்.

கோபமாக இருந்தாலோ, ஏதாவதொரு காரணத்தால் ரத்த அழுத்தம் அதிகரித்திருந்தாலோ வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது.இரவில் நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.