நம் அன்றாட வாழ்க்கையில், அரசு உதவித் திட்டங்கள், வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள், கல்வி தொடர்பான பதிவுகள் உள்ளிட்ட பல தரப்புகளில் ஆதார் கார்டு, மார்க்க்ஷீட், முகவரி நிரூபணங்கள் போன்ற ஆவணங்களை ஸ்கேன் செய்து PDF ஆக மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இப்போது பலரும் ஸ்மார்ட்போனில் ஸ்கேன் செய்யும் செயலிகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அந்த செயலிகள் இலவசமாக சில ஸ்கேன்கள் மட்டுமே வழங்கி, பிறகு பணம் வசூலிக்கின்றன. மேலும் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களும் ஏற்படுகின்றன.
இந்த சிக்கல்களுக்கு எளிய தீர்வு – Google Drive!
Google Drive என்ற செயலியில் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்யும் சிறப்பான மற்றும் பாதுகாப்பான வசதி இருக்கிறது. இது 100% இலவசம் மற்றும் நேரம் மிச்சமாகும்.
Google Drive மூலம் ஸ்கேன் செய்வது எப்படி? (Step-by-Step Guide)
- Google Drive App-ஐ திறக்கவும் (Android/iPhone இரண்டிலும் இருக்கும்)
- கீழே உள்ள “+” பட்டனை கிளிக் செய்யவும்
- அதில் வரும் Camera icon/Scan option-ஐ தேர்வு செய்யவும்
- அல்லது Home Screen-ல் Google Drive ஐகானை லாங் பிரஸ் செய்து “Scan” தேர்வு செய்யலாம்
- ஸ்கேன் செய்ய வேண்டிய ஆவணத்தை கேமரா மூலம் ஸ்கேன் செய்யவும்
- ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் உள்ளால், “Add More Pages” என்பதை தேர்வு செய்து தொடரலாம்
- Done என்பதை கிளிக் செய்து, PDF என்ற வடிவத்தில் Save செய்யவும்
- அவ்வளவுதான்! அந்த PDF உங்கள் Google Drive-இல் சேமிக்கப்படும்
- அதனை பிறருடன் பகிரலாம்
- அல்லது நேரடியாக பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்
பாதுகாப்பானதா?
Google Drive என்பது உலகளவில் பரிந்துரைக்கப்படும் பாதுகாப்பான கிளவுட் சேமிப்பு சேவையாகும். உங்கள் ஆவணங்கள் உங்கள் Google கணக்கில் பாதுகாப்பாக சேமிக்கப்படும்.
புதிய செயலிகள் அல்லது இணையதளங்களை நம்ப வேண்டாம். உங்கள் ஸ்மார்ட்போனிலேயே இருக்கும் Google Drive பயன்படுத்துங்கள். PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான எளிய, இலவச, பாதுகாப்பான வழியை இப்போது பயன்படுத்தத் தொடங்குங்கள்!