மனித உடலைப் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

மனித உடலின் எடையில் 65 சதவீதம் ஆக்சிசன் இருக்கிறது. மனிதனின் சிறுநீரகங்களில் லட்சக்கணக்கான வடிகட்டிகள் உள்ளது. இவை தினமும் 190 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது.

பாலில் உள்ள ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலமும், கால்சியம் தான் மனிதனுக்கு இரவில் நல்ல தூக்கத்தைப் தருகிறது. ஒரு மனிதனுக்கு இடது பக்க நுரையீரலை விட வலது பக்கம் நுரையீரல் அதிக எடை கொண்டது. இடதுபக்க நுரையீரல் 19 அவுன்ஸ். வலதுபக்க நுரையீரல் 22 அவுட்ஸ்.

மனிதனின் கல்லீரலின் எடை 50 முதல் 60 அவுன்ஸ் வரை உள்ளது. மனித இரைப்பையின் எடை 4 அவுன்ஸ். 5 வயது குழந்தைக்கு மொத்தம் 20 பற்கள் இருக்கும்.

நமது பற்கள் முழுவதும் கால்சியம், பாஸ்பரஸ் உப்பினால் ஆனவை. மனித உடல் முழுவதும் மூன்று பொருட்களால் உருவானது. அந்த மூன்று பொருட்கள் தண்ணீர், ஹைட்ரஜன், ஆக்சிஜன்.

மனித உடலில் மிகவும் தடியான தசைப்பகுதி நாக்குதான். மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற பகுதிகளை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்யலாம். ஆனால் ஒருவருடைய தோலை எடுத்து மற்றொருவருக்கு பொருத்த முடியாது. ஏனென்றால் ஒருவருடைய தோல் மற்றவருக்கு பொருந்தாது.

உலகில் 11 சதவீத மக்கள் இடது கைப்பழக்கம் கொண்டவர்கள்.

மனித உடலில் இருக்கும் மற்ற உடல் உறுப்புகளை விட நாக்கில் காயம் ஏற்பட்டால், அது விரைவில் ஆறி விடும்.

ஒரு சாதாரண மனிதன் தனது வாழ்க்கையில் 25 வருடத்தை தூக்கத்தில் கழிக்கிறான்.

நமது விரல்களில் மிகவும் அதிக உணர்திறன் கொண்டது எது தெரியுமா..? அது நம் ஆள்காட்டி விரல் தான்.

மனித உடலில் தூய்மையான ரத்தம் சிறுநீரக சிறைகளில் உள்ளது. இந்த சிறுநீரகங்கள் தான் மனித உடலில் உள்ள நீரை சமநிலைப்படுத்தும்.

ஒரு மனிதன் 24 மணி நேரத்தில் கழிக்கும் சிறுநீரின் அளவு 5 லிட்டர்.

பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள்ஆண்கள் மூளையில் இருக்கிறது.

ஒரு மனிதனின் நடை வேகம் மணிக்கு 5 கி.மி முதல் 6 கி.மி வரை இருக்கும்.

மனித ரத்தத்தில் 90% பிளாஸ்மாவும் 10% திடப்பொருளும் உள்ளது.

லெசித்தின் என்ற அமிலம் நமது ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைகிறது.

நமது கண்களில் உள்ள லாக்ரிமால் என்ற சுரப்பி கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்கிறது.

பிறந்த குழந்தைக்கு வெள்ளை, கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது.

மனித உடலில் ஒரு நாளைக்கு 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன.

உயிரினங்களில் சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம்.

Recent Post