இடுப்பு வலி நீங்க பாட்டி வைத்தியம்

ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு வந்த இடுப்பு வலி தற்போது இளம் வயதினருக்கே சர்வ சாதாரணமாக இடுப்பு வலி வருகிறது. உடல் உழைப்பு அதிகம் இல்ல வேலைகளில் இருப்பதால் இப்பிரச்சனைகள் வருகிறது. இதற்கு நமது இயற்கை தரும் மருத்துவத்தை பார்ப்போம்.

பொதுவான சில அறிவுரைகள்

தொடர்ந்து நாற்காலியில் அமர்ந்து இருக்காமல் அடிக்கடி எழுந்து நடப்பது நல்லது. கனிணி மேசையும், நாற்காலியும் சமமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது. நீந்துவது, ஒடுவது, போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். குறைந்தது நடைபயிற்சியாவது செய்வது முக்கியம்.

Advertisement

மருத்துவக் குறிப்புகள்

உணவில் அடிக்கடி முடக்கத்தான் கீரை, இஞ்சி, புதினா, பூண்டு, போன்ற வாயு நீக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கொள்ளு ரசம் வைத்து குடிப்பதால் இடுப்பு வலியை குறைக்கும்

ஒரு கிராம் சுக்கு, ஐந்து மிளகு, ஐந்து கிராம்பு போன்றவைகளை தேநீர் செய்து தினமும் இருவேளை குடித்து வர இடுப்பு வலி நீங்கும்.

பூண்டை இடித்து அதனை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இடுப்பு வலி இருக்கும் இடத்தில் தடவினால் இடுப்பு வலி நீங்கும்.

இடுப்பு வலி நீங்க முடக்கற்றான் இலையோடு வெங்காயம் மற்றும் பருப்பு சேர்த்து நன்கு வதக்கி சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.

கஸ்தூரி மஞ்சள், பூண்டு, நொச்சி இலை போன்றவைகளை அரைத்து அதனை வேப்ப எண்ணெய்யில் போட்டு காய்ச்சி வடிகட்டி அதனை வலி இருக்கும் பகுதியில் தடவ இடுப்பு வலி குறையும்.

தவிர்க்க வேண்டியவை

பகல் நேர தூக்கம், மன கவலைகள், மன அழுத்தம் போன்ற நோய்களை உருவாக்கும் வறுத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. உருளைகிழங்கு, பட்டாணி, காராமணி, வாழைக்காய், அதிகமான புளி, குளிர்பானங்கள் தவிர்ப்பது நல்லது.

கத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் இவற்றை தவிர்க்கவும்.

அதிக எடையை தூக்க வேண்டாம்.

இதில் குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒன்றை நீங்கள் செய்து வர உங்களுக்கு பலன் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கும். பலன் இல்லாதபட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது.

இது போன்று மருத்துவம் குறிப்புக்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.