பெண்களின் ஸ்மார்ட்போன்களில் இருக்கவேண்டிய முக்கியமான 5 அப்ளி கேஷன்கள்

ஷேக் 2 சேப்ட்டி: இதை பயன்படுத்துவது மிக சுலபம். அவசர காலத்தில் ஸ்மார்ட்போனை ஷேக் செய்தால் போதும் அல்லது பவர் பட்டனை நான்கு முறை அழுத்தினாலே நீங்கள் பதிவு செய்துள்ள நபருக்கு ‘உங்களுடைய உதவி தேவை’ என்ற செய்தியானது சென்று விடும். இதற்க்கு இன்டர்நெட் இணைப்பு தேவையில்லை. பாலியல் தொந்தரவு, விபத்து இயற்கை பேரழிவு போன்ற நேரங்களில் இந்த ஷேக் 2 சேப்ட்டி ஆப் உதவிகரமாக இருக்கும்.

எலா: குழந்தை பேறுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு இந்த ஆப் உதவியாக இருக்கும். உங்களுடைய கடைசி மாதவிடாய் சுழற்சி எப்போது ஆரம்பித்தது?, எத்தனை நாட்கள் சுழற்சி இருந்தது? உங்களுடைய வயது போன்ற விவரங்களை இதில் பதிவு செய்தால் போதும். உங்கள் உடலுறவிற்கு பொருத்தமான நாட்களையும், நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்பதை உங்களுக்கு தீர்வுக்கும். மேலும் மருத்துவ ஆலோசனைகளும் இதில் கிடைக்கும்.

சிடோர் ஸ்குவாட்: நீங்கள் பயணம் செய்யும் இடங்களில் அல்லது புது இடங்களில் ‘டாய்லெட்’ எங்கே இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டிவிடும். அதை பயன்படுத்தியவர்களின் கருத்துக்கள் அதில் காண்பிக்கப்படும். எனவே நீங்கள் சிரமம் கொடுக்காமல் நல்ல ஓய்வறைகளை கண்டுபிடிக்க வசதியாக இருக்கும்.

Advertisement

ஒ.பி.ஐ: இந்த ஆப்பின் கேமரா மூலம் உங்கள் விரலை படம் எடுத்தால் போதும். உங்கள் விரலுக்கு பொருத்தமான நெயில் பாலிஷ் எது என்பதை காட்டும். அதில் உங்களுக்கு பிடித்த நிறத்தை தேர்வு செய்து அதனை உபயோகிக்கலாம்.

மிண்ட்: பட்ஜெட்டை கட்டுப்பாட்டிற்குள் வைக்க நினைப்பவர்களுக்கு இந்த ஆப் உதவுகிறது. இதில் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் மற்றும் கடன் அட்டை போன்ற தகவல்களைப் பதிவு செய்து, உங்களுடைய செலவுகளை பதிவு செய்து வந்தால், ஒவ்வொரு மாதத்திலும் நீங்கள் செய்திருக்கும் செலவு கணக்கினை துல்லியமாக காண்பிக்கும். ஒவ்வொரு மாதமும் உங்களுடைய செலவு கணக்குகளை இது துல்லியமாக காட்டும். கடந்த மாதம் செலவு எவ்வளவு? இந்த மாதம் செலவு எவ்வளவு? என்பதையும் காட்டும். அதுமட்டுமா கூடவே செலவை குறைக்கும் வழிமுறைகளையும் வழங்கும்.