in

கல்லூரி படிப்பை பாதியில் விடுத்த தலைச்சிறந்த இந்திய தொழிலதிபா்கள்

ஓரு சிறந்த தொழிலதிபா் ஆவதற்கு படிப்பு முக்கியமானதா? என்ற கேள்விக்கு பதில் இன்னும் குழப்பத்திலேயே இருக்கின்றது. ஆனால், தொழில் துவங்க படிப்பு மட்டும் போதாது, திறமையும் வேண்டும்.
கல்லூரிப்படிப்பை முழுமையாக முடிக்காமல் இந்த உலகில் மாபெரும் தொழில் சக்கரவா்த்தியாக பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பல நபா்கள் இருக்கின்றனா்.
அவ்வாறு, இந்தியாவிலும் கல்லூரிப்படிப்பை முழுமையாக முடிக்காமல் தொழில் தொடங்கி அதில் வெற்றி கண்ட சில தொழில் அதிபா்களை இப்போது காண்போம். இவா்கள் ஒரு முன் மாதிாியாகவும் திகழ்கிறாா்கள்.
ட்ரிஷ்நெட் அரோரா (Trishneet Arora)
ட்ரிஷ்நெட் அரோரா தனது 23 வயதில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய இவர் TAC Security என்ற நிறுவனத்தை நிறுவி அதன் தலைமை நிா்வாக அதிகாாியாக பணிப்புாிகிறாா். இந்நிறுவனம், சில நிறுவனத்தின் முக்கியமான தகவல்களை பாதுகாக்கும் மென்பொருளை வழங்குகிறது. இதன் குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ், மத்திய புலனாய்வு விசாரணை (CBI), குஜராத் காவல்த்துறை மற்றும் பலர்.
ரித்தீஸ் அகர்வால் (Ritesh Agarwal)
ரித்தீஸ் அகர்வால் தனது 17வது வயதில் கல்லூரிப்படிப்பை பாதியில் விட்டு 22வது வயதில் கோடிஸ்வரனானார். இவா் ஒயோ ரும்ஸ் (Oyo Rooms) என்ற நிறுவனத்தை நிறுவி இதன் மூலம் மிக குறைந்த விலையில் ஹோட்டல் அறைகள் விற்கும் இணையத்தளத்தை ஆரம்பித்தாா், இந்நிறுவனம் சுமாா் 230 நகரங்களில், 8500 ஹோட்டலுடன் இணைந்து, 70,000க்கும் மேற்ப்பட்ட அறைகளை இணையத்தில் வழங்குகிறது. 2016ல் இந்நிறுவனத்தின் வருமானம் 2500 கோடியாகும். இந்தியாவின் இளம் வயது பணக்காரா்கள் பட்டியலில் இவரும் ஓருவர்.
கைலாஷ் கெட்கர் (Kailash Ketkar)
கைலாஷ் கெட்கர் மகாராஷ்டிராவில் பிறந்தவா், இவரது பெற்றோர் இவரை நன்றாக படிக்கவைக்க முயற்சி செய்துள்ளனர், ஆனால் இவருக்கு படிப்பில் நாட்டமில்லை, தனது 9ம் வகுப்பில் தோல்வி அடைந்தாா், அதன் பிறகு, தனது விட்டின் அருகில் இருக்கும் சிறு கடையில் கால்குலேட்டர் தொழில்நுட்பவியலாளராக வேலை பாா்த்து உள்ளார். இவர் அந்த வேலையை மிகவும் விருப்பத்துடனும், திறமையாகவும் பணியாற்றி வந்தார். ஓரு நாள் இவருடைய இளைய சகோதரர் இவாிடம் வைரஸ் தடுப்பு (antivirus software) மென்பொருள் தயாாித்து தர வேண்டியுள்ளார், இதற்க்காக அவர் உழைக்க ஆரம்பித்து Quick Heal என்ற மென்பொருளை இந்தியாவில் முதன்முறையாக கண்டுபிடித்தாா். இன்று, இந்த மென்பொருளை இலட்சக்கணக்கான கணினியில் பயன்படுத்தப்படுகிறது.
குணால் ஷா (Kunal Shah)
குணால் ஷா தனது MBA படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் ஃப்ரி சாா்ச் (Freecharge) எனும் செயலியை 2010ல் உருவாக்கி அதில் வெற்றியும் அடைந்துள்ளாா். மேலும் இவா் சில புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளாா். venture capitalist என்ற நிறுவனத்தில் ஆலோசகராகவும் இருக்கிறார்.
பாவின் துர்க்கா (Bhavin Turakhia)
பாவின் துர்க்கா தனது கல்லூரிப்படிப்பை விடுத்து Directi என்ற நிறுவனத்தை தனது சகோதரன் திவ்யங் (Divyank) உடன் இணைந்து தொடங்கினாா். இவ்இருவரும் 10க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களை தொடங்கியுள்ளனா், இருந்தாலும் Directi நிறுவனமே தலைமை நிறுவனம் ஆகும். இவருடைய சொத்து மதிப்பு 2016ல் 1.3 பில்லியன் அமொிக்க டாலராக உள்ளது.
ஆயுஷ் ஜெய்ஸ்வால் (Ayush Jaiswal)
ஆயுஷ் ஜெய்ஸ்வால் கல்லூரி வாழ்க்கையை தவிா்த்து, தனது 18வது வயதில் சொந்தமாக நிறுவனம் ஆரம்பித்தார், ஆனால் அந்நிறுவனத்தை நிா்வாகிக்க முடியவில்லை, அதனால் தன் திறமைகளை வளா்த்து கொள்ள ஒரு சிறு நிறுவனத்தில் வேலை செய்து தனது திறமைகளை வளா்த்து கொண்டு, மீண்டும் 2017ல் பெஸ்டோ (Pesto) என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கினாா், மேலும் $200,000 இந்நிறுவனம் வருமானம் ஈட்டியது. தற்போது இந்நிறுவனம் Gary Vaynerchuk’s Vayner Media என்ற நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றி வருகிறது.
பல்லவ் நதானி (Pallav Nadhani)
பல்லவ் நதானி, பியுசன்சாா்ட்ஸ் (FusionCharts) என்ற நிறுவனத்தை எந்தவொரு வெளி முதலீடு இல்லாமல் தொடங்கினாா். இப்போது இந்நிறுவனம் 23,000 வாடிக்கையாளா்கள் மற்றும் 500,000 டெவலப்பர்களை கொண்டுள்ளது, கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து இவர் தனது படிப்பை பாதியில் விட்டு தொழில் தொடங்கினாா் அதில் வெற்றியும் கண்டாா். பின்னா் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் முடித்தாா். மேலும், இவர் சர்வதேச பத்திரிக்கைகளில் தொழில்நுட்பம் சம்மந்தமாக கட்டுரைகள் எழுதி வருகிறார்.