சென்னை ஏர்போர்ட்டில் இந்தியன் 2 பட ஷூட்டிங்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்தின் வேலைகள் நடைபெற்று வருகின்றன. கமல்ஹாசன் உடன் நடிகர் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இயக்குனர் ஷங்கர் இந்தியன்-2 மற்றும் ராம்சரண் படங்களை இயக்கி வருகிறார். தற்போது ராம்சரண் படத்திற்காக இயக்குனர் ஷங்கர் நியூசிலாந்து சென்றுள்ளார். வரும் 3-ம் தேதி சென்னை திரும்புகிறார். அதன் பிறகு 5-ம் தேதியிலிருந்து இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் தொடங்குகிறது.
இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா தான் உயிரோடு இருப்பதாக படம் நிறைவு பெற்றிருக்கும். இந்நிலையில் அடுத்த பாகம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.