முக்கணிகளில் முக்கியமான கனி என்றால், அது பலா தான். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் இந்த பழம், பல்வேறு பலங்களை மனிதர்களுக்கு அளிக்கக்கூடியது. இதுபற்றி இந்த கட்டூரையில் விளக்கமாக பார்க்கலாம்.
பலா பழத்தில் உள்ள பலம்:பலா பழத்தில் 100-க்குட்பட்ட பழ சுளைகளும், பழ விதைகளும் இருக்கிறது. இந்த பழத்தை ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். பழம் மட்டுமின்றி, அதன் கொட்டைகள், பிசினை சாப்பட்டாலும், உயிரணுக்களின் எண்ணிக்கை அதிரிக்கும்.
பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளுக்கும், பலா மரத்தின் பட்டை, இலை சிறந்த தீர்வாக இருக்கும். பட்டை மற்றும் இலையை வைத்து காசயம் செய்து சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனைகள் சரியாகும்.
உடல் வலி ஏற்பட்டு தைலத்தை உடல் முழுவதும் தேய்த்து கொண்டிருப்பவரா நீங்கள் இருந்தால், உங்களுக்கு பலா மரத்தின் பழுத்த இலைகள் போதுமானது. அதாவது, பலா மரத்தின் பழுத்த இலைகளை, நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் அந்த தண்ணீரில் குளித்து வந்தால், உடல் வலி சரியாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு பொதுவாக அதிக அளவில், உடல் வலி இருக்கும். அவர்களுக்கு இது ஏற்ற மருத்துவம்.
பளபளப்பான தோல் வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு இரண்டு பலாச்சுளைகளை சாப்பிட்டு வாருங்கள். உங்களது தோல் மினுமினுப்பாக மாறிவிடும். 100 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், நிச்சயம் பலன் கிடைக்கும்.
பலாப்பழம் சாப்பிட்டு வந்தால், உடல் எடையும் அதிகம் குறையும் என்று கூறுவார்கள். காலை, மதியம், இரவு ஆகிய 3 வேலைகளிலும் 2 பலாச்சுளைகள் சாப்பிடுவது உடல் உடையை குறைக்க உதவும். இதில், நார்ச்சத்து, புரோட்டீன் அதிகமாக இருப்பதால், உடல் குறையும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.