“இன்டெர்வல் பிளாக்ல தெறிக்கவிடப்போறாங்க”.. ஜெயிலர் அப்டேட் கொடுத்த நாயகி!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர், சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பல வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் முதல் முறையாக சூப்பர் ஸ்டாரை இயக்குகிறார்.
பல மொழிகளை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர், குறிப்பாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட நடிகர் சிவ் ராஜ்குமார் போன்ற பல நடிகர் நடிகைகள் இந்த ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
அனிரூத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகை மிர்னா மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அவர் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஜெயிலர் பட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் ஜெயிலர் படத்தின் இன்டர்வெல் ப்ளாக்கில் தலைவரை பார்த்து எனக்கு புல்லரித்துவிட்டது என்று கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளார்.