ஜீப்பில் மாஸாக வந்திறங்கிய ஜெயிலர்.. 72 வயதிலும் கொஞ்சம் கூட குறையாத ஸ்டைல்!

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நேற்று சட்டென்று வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் பட அப்டேட். நேற்று பட குழுவினால் வெளியிடப்பட்ட அந்த பிரமோவில், இந்த படத்தில் நடிக்கும் அனைத்து முன்னணி கதாபாத்திரங்களின் காட்சியும் சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது அவர்களுடைய ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை ஏற்படுத்தி விட்டது என்று தான் கூறவேண்டாம். அதிலும் குறிப்பாக மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட்டின் ஜாக்கி ஷரீஃப், என்று ஒரு PAN இந்தியா படமாக மாறியுள்ளது ஜெயிலர்.
நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், தமன்னா மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யோகி பாபு, ஜாபர் சாதிக் மேலும் youtube மூலம் பிரபலமான ஒரு குழந்தை நட்சத்திரமும் இந்த படத்தில் நடித்துள்ளார்.
அனைவரையும் ப்ரோமோவில் காட்டியபிறகு இறுதியாக புழுதி பறக்க தனக்கே உரித்தான அந்த மாஸ் ஸ்டைலில் காரின் கதவைத் திறந்து, சூப்பர் ஸ்டார் இறங்கி வந்து நின்று சிரிக்கும் அந்த காட்சி, ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது என்றே கூறலாம்.
நெல்சன் திலீப்குமார் கையாண்டுள்ள விதமே அழகாக உள்ளது என்று பலரும் பாராட்டி வருகின்றனர். ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.